செயலாளரின் வாழ்த்துச் செய்தி

அரசாங்க சேவை ஆணைக்குழு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 54 ஆம் உறுப்புரையின் கீழ் நிறுவப்பட்டுள்ள போதிலும் அதன் ஆரம்பம் 1946 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கின்றது. அரசியலமைப்பின் 55 ஆம் உறுப்புரையின் பிரகாரம் அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், அவர்களது ஒழக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களினால் மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள், கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள், முப்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து மாகாண சபைகளினதும் கல்வித்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட சேவைப் பெறுநர்களுக்கு இந்த ஆணைக்குழுவினால் சேவை வழங்கப்படுகின்றது. வினைத்திறன்மிக்க சேவையொன்றை வழங்கும் நோக்கில் ஆணைக்குழுவுக்குரிய அதிகாரங்கள் அரசியலமைப்பின் 56 மற்றும் 57 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்டுள்ள கல்வி மற்றும் சுகாதாரம் எனும் இரு குழுக்களுக்கும் அமைச்சு செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் போன்ற உத்தியோகத்தர்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள போதிலும் அனைத்து உத்தியோகத்தர்களினதும் மேன்முறையீட்டு அதிகாரம் ஆணைக்குழுவுக்குரியதாகும்.

ஆணைக்குழுவிற்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் கோரிக்கைகள் அதிகளவில் உள்ளதானது ஒரு சவாலாகக் காணப்படுகின்றது. அதன் காரணமாக நாம் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றோம். அதாவது, அனுமதிக்கப்பட்ட ஆளணி 230 அளவில் காணப்படல், கோரிக்கைகள் தொடர்பில் வேண்டப்படும் அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதிலுள்ள அசாதாரண தாமதம், குறைபாடுகள் உள்ள அல்லது பூரணமற்ற அல்லது உரிய மாதிரிப் படிவத்தில் அல்லாத அறிக்கைகளை சமர்ப்பித்தல் போன்றவையே அவையாகும். அவ்வாறான காரணங்களினால் எம்மால் வழங்கப்படும் சேவைகளை உரிய நேரத்திற்கு நிறைவு செய்வதில் சிக்கல்களை நாம் எதிர்நோக்குகின்றோம். இதனால் ஆணைக்குழுவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுகின்றது. இந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்காக தகவல் தொழில்நுட்ப வசதிளைப் பயன்படுத்துவதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம். அதற்காக நவீனமயப்படுத்தப்பட்ட இந்த இணையத்தளத்தை தாங்களுக்கு அறிமுகம் செய்வது நாங்கள் அடைந்த வெற்றியாகவே கருதுகின்றாம். இந்த இணையத்தளத்தினூடாக தாங்களுக்கு பின்வரும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

  • ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், விதிகள், ஆட்சேர்ப்புத் திட்டங்கள், இடமாற்றத் திட்டங்கள், சேவைப் பெறுநர் பட்டயம் என்பவற்றை இலகுவாகப் பயன்படுத்துவதற்கு முயுமாதல்.
  • பல்வேறுபட்ட விண்ணப்பப்படிவங்கள் மற்றும் மாதிரிப் படிவங்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமாதல்.
  • ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள், அறிவித்தல்களை தாமதமின்றி அறிந்துகொள்வதற்கு முடியுமாதல்.
  • ஆணைக்குழுவினால் நாளாந்தம் எடுக்கப்படும் தீர்மானங்களின் சாராம்சத்தை வேலைநாட்கள் 02 க்குள் சேவைப் பெறுநர்களுக்கு அறிந்துகொள்ள முடிகின்றமை.
  • ஒவ்வொரு சேவைப் பெறுநருக்கும் தனது கோரிக்கை தொடர்பில் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான விபரமொன்றை இணையத்தளத்தின் மூலம் அவதானிக்க முடியுமாதல்.
  • இணையத்தளம் மற்றும் தரவு முகாமைத்துவத் தொகுதியின் மூலம் தங்களது கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பது பற்றிய தற்போதைய முன்னேற்றத்தை தங்களது கையடக்க தொலைபேசி ஊடாக குறுஞ்செய்தி மூலம் பெற்றுக்கொள்ள முடியுமாதல்.
  • ஆணைக்குழுவுக்கு தேவையான தகவல்களை தொடரறா முறை மூலம் அனுப்புவதற்கு அமைச்சு செயலாளர்களுக்கு / திணைக்களத் தலைவர்களுக்கு முடியுமாதல் உள்ளிட்ட பல்வேறுபட்ட சேவைகள்.

இதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது தாங்கள் இந்த அலுவலகத்திற்கு வருகைத்தரல் மற்றும் அடிக்கடி அலுவலக உத்தியோகத்தர்களை அழைப்பதை குறைப்பதன் மூலம் தங்களது காலம், நேரம், உழைப்பு, பணம் என்பவற்றை சேமிப்பதற்கும் தங்களுக்காக கூடிய விரைவில் வினைத்திறனுள்ள சேவையை வழங்குவதற்கும் அலுவலக உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் தகவல் சட்டத்தின் கீழ் கோரப்படும் கோரிக்கைகளை குறைத்துக்கொள்வதற்கும் அரசாங்க சேவையில் வெளிப்படைத்தன்மையை பேணிவருவதற்கும் சிறந்த பண்புகளைக்கொண்ட அரசாங்க சேவையை வழங்குவதற்கும் எடுக்கப்படும் முயற்சியாகும். அதற்காக இந்த ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள், குழுக்களின் தவிசாளர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், செயலாளர் ஆகிய நான் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும் உச்ச அளவிளான அர்ப்பணிப்பை தங்களுக்காக வழங்குவதற்கு தயாராக உள்ளோம். அதற்காக தங்களது ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கின்றேன்.

தேசத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் அரசாங்க சேவைக்காக பணியாற்றுவது எமது தூரநோக்காகும்.