அதிகாரங்களும் செயற்பாடுகளும்
அதிகாரங்கள்
- இலங்கை சனநாயக சோசலிச குடியரசு யாப்பின் IXஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அரச உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கல் ஆகியவற்றின் அதிகாரங்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மாகாண அரச சேவைகள், நீதிச் சேவை, திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் உட்படமாட்டார்கள். [41(1), 55(2), 55(4) மற்றும் 111(எ) உறுப்புரைகளைப் பார்க்க]
- அரச சேவைக்கான சட்டங்களை விதிமுறைகளை வடிவமைப்பதற்கும் செயல்முறைகளைத் தயாரிப்பதற்கும் அரசாங்க சேவை ஆணைக்குழு அதிகாரம் பெற்றுள்ளது. [61 (B) உறுப்புரையைப் பார்க்க]
- அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட கட்டளைகளை அல்லது தீர்மானங்களை எதிர்த்து மேன்முறையீடு செய்தல் தொடர்பாக [61(A) உறுப்புரையைப் பார்க்க, பக்க குறிப்பு தடுப்பு சட்ட நடவடிக்கைகள்]
தொழிற்பாடுகள்
- பொது நிருவாக சுற்றறிக்கை இல. 06/2006 (இணைப்பு II) விபரிக்கப்பட்டுள்ளவாறு திணைக்களத் தலைவர்கள் தவிர்ந்த அனைத்து சிரேட்ட மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அதி உயர் சேவை/மூன்றாம் நிலை விசேட தரம் பெற்ற உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் பதவி நீக்கல் போன்றவற்றில் அரசாங்க சேவை ஆணைக்குழு தனது அதிகாரத்தை பிரயோகிக்கின்றது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிருவாக பணிகள் சம்பந்தமாக உரிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு/எந்தவொரு அமைச்சுக்கும் கீழ்வராத திணைக்களத் தலைவர்கள் மேலதிக செயலாளர் மட்டத்திலான உத்தியோகத்தர்கள் அல்லது அதற்கும் மேலான, மேலும் சம்பந்தப்பட்ட செயலாளரினால் பெயர் குறிப்பிடப்பட்டு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பாரப்படுத்தப்படும். (அசேஆ சுற்றுநிருபம் 05/2011 13.12.2011 மற்றும் 05/2011(i) 20.12.2011)
- நிபந்தனைகளும் செயல்திட்டங்களும் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் என்பதற்கு அமைய மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளை அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க சேவை ஆணைக்குழு கையளித்துள்ளது. இது தேவைக்கு ஏற்ப காலத்திற்கு காலம் திருத்தப்படலாம். [1733/52ஆம் இலக்க, 25.11.2011 திகதிய அரசாங்க வர்த்தமானி (விசேடம்) பார்க்க]
- தாபனக் கோவையின் IIஆம் தொகுதியின் அத்தியாயம் XLVIII இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாம் மட்டத்திலான சிரேட்ட தரத்தைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் அதிஉயர் தரம்/விசேட தரம் சார்ந்த உத்தியோகத்தர்களுக்கு எதிரான ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு/திணைக்களத் தலைவர்களுக்கு எந்த ஒரு அமைச்சுக்கும் கீழ்வராத குறித்த விடயத்துக்குப் பொறுப்பான மற்றும் மேலதிக செயலாளர் மட்டத்தைச் சார்ந்த அல்லது மேற்படி மற்றும் குறித்த அமைச்சு செயலாளரினால் பெயர் குறிப்பிடப்பட்டு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகத்தருக்கு பாரப்படுத்தப்படும்.(இல.1733/52 25.11.2011 ஆந் திகதிய விசேட அரசாங்க வர்த்தமானியைப் பார்க்க)
- அரசாங்க சேவை ஆணைக்குழு அதன் நடவடிக்கைகளை ஒழுங்கு விதிகளை வடிவமைத்து பிரசுரிப்பதிலும் அரச சேவை தொடர்பான சுற்றறிக்கைகள், பொது அறிவுறுத்தல்கள் என்பனவற்றை வெளியிடுவதிலும், சேவை பிரமாணக் குறிப்பையயும் ஆட்சேர்ப்புத் திட்டத்தையும் வடிவமைத்து புதுப்பித்தலிலும் மேலும் அரச சேவை தொடர்பான தரவுகளையயும் பரவலாக்கலிலும் ஈடுபடுகின்றது.நியமனம், பதவிஉயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவிநீக்கல் தொடர்பாக அதிகாரம் கையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு எதிராக முரண்பட்டவர்களின் மேன்முறையீடுகள் தொடர்பாகவவும் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு தொழிற்படுகின்றது.